தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று காரணமாக 512 வாக்குச்சாவடிகள் 2ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது - நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல்: கரோனா தொற்று காரணமாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள 512 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ்
மாவட்ட ஆட்சியர் மெகராஜ்

By

Published : Feb 9, 2021, 4:36 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.08) ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பேசிய ஆட்சியர் மெகராஜ், “நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது 1,623 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் தனிமனித இடைவெளியுடன் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள 512 வாக்குச்சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2,135 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும், பட்டியலில் உள்ளவர்கள் இறந்திருந்தால் அவர்களின் பெயரை நீக்கம் செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி:டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details