நாமக்கல் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களுக்கான முதல்கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தை அடுத்து, மாவட்டத்தில் உள்ள மற்ற 7 ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டமாக வரும் திங்கள்கிழமை (30ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புதுசத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுவின் 13ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்காக செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் உள்ளாட்சித் தேர்தல்களில் நான்கு வகையாக வாக்கு சீட்டுகளை வைத்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே இன்று காலை செயல் விளக்கம் அளித்தார்.