தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லாததால் அவதி! - namakkal rural body election

நாமக்கல்: அருகே தேர்தலில் வாக்கு செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லைததால் அவதி!
வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லைததால் அவதி!

By

Published : Dec 28, 2019, 8:31 AM IST

Updated : Dec 28, 2019, 10:01 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.

ராசிபுரம் ஒன்றியத்திற்கான தேர்தல் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூவர் கலை கல்லூரியில் நடைபெற்றது. குறுக்குபுரம் பஞ்சாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர்.

சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்றக் காட்சி

இந்த வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளை கையில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. பனங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பவரது மகள் ஆயிஷாபானு (21). மாற்றுத்திறனாளியான இவர் தனது முதல்வாக்கினை செலுத்த வத்ர். வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி இல்லாததால் அவரது சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்று வாக்களிக்க உதவினார்.

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லாததால் அவதி!

இதையும் படிங்க: வாக்காளர்களின் வாக்கை செலுத்திய அதிமுக பிரமுகர் - கிளம்பிய சர்ச்சை

Last Updated : Dec 28, 2019, 10:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details