நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலத்திலிருந்து பெயிண்ட் கேன்கள் அடங்கிய லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மினி லாரியை சேலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். உதவியாளர் ஜெய் உடனிருந்தார்.
மினிலாரி புதுச்சத்திரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, பின்பக்க டயர் பஞ்சராகி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மேலும், லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த பெயிண்ட் கேன்கள் உடைந்து சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெயிண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு லாரியை அப்புறப்படுத்தி சாலையில் கொட்டிய பெயிண்டை சுத்தம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதையும் படிங்க:கோவை சாலையில் திடீர் பள்ளம்