நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திபலகானூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. பூ கட்டும் வேலை செய்து வரும் இவருக்கு,பிரியா (19) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
மோட்டாரைத் தொடக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு - மின்மோட்டார் ஆன் செய்கையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
நாமக்கல்: ராசிபுரம் அருகே மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை கணவன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் குடிநீர் பிடிப்பதற்காக மின்மோட்டாரை பிரியா இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பிரியாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.