நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர்நாடு தெவ்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி நந்தகுமார் (22) கடந்த ஓராண்டு காலமாக காதலித்துவந்துள்ளார்.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை அவர் தன் ஆசைக்கு இணங்கவைத்து கர்ப்பமாக்கினார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், திருமணம்செய்வதாகக் கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அவரை அழைத்து தனது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.