தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குக்கு பணம் கொடுப்பது கற்பை பறிப்பது போல -நாம் தமிழர் வேட்பாளர் வேதனை - தேர்தல் பரப்புரை

நாமக்கல்: மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாஸ்கரன், வாக்குக்கு பணம் கொடுப்பது கற்பை பறிப்பது போல என நமக்களித்த பிரத்யேக பேட்டியில் வேதனை தெரிவித்தார்.

NTK candidate Baskaran

By

Published : Apr 7, 2019, 9:31 AM IST


நாமக்கல் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாஸ்கரன். இவர் கால்நடை மருத்துவம் பயின்றுள்ளார். 'மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் இவர் வாக்குக்காக பணம் கொடுப்பது கற்பை பிடுங்குவது போன்றதாகும். இதுவே எங்களது பிரதான முழக்கமாக உள்ளது' என தெரிவித்தார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, 'தமிழ்நாட்டில் அதிகம் படித்த இளைஞர்கள் அரசியல் தெரிந்துவைத்துள்ளனர். இயற்கையை காப்பாற்றினால் போதும் மனிதர்கள் தானாகவே வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். தற்சார்பு வாழ்க்கை முறை மற்றும் தற்சார்பு கல்வி வழங்க வேண்டும். இதனை எந்த ஆட்சியாளர்களும் நடைமுறைப்படுத்தவில்லை. அவர்கள் தங்களது தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்றனர். மக்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதே கிடையாது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என வேதனை தெரிவித்தார்.

மேலும் அவரிம் நாம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நம்மிடம் பதிலளித்து பேசினார். பின்வருமாறு:

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாஸ்கரன்

கேள்வி:நாமக்கல் மாவட்ட மக்களின் அடிப்படை தேவை என்ன ?

  • பதில்: நாமக்கல் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையானது நீர் வசதி செய்துதரவேண்டும் என்பதே. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையை சேமித்து இருந்தால் இங்கு இவ்வளவு பற்றாக்குறை நேர்ந்திருக்ககூடுமா? நீரை சேமிக்க நாமக்கல் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. முறையாக தூர்வாரி இருந்தால் இன்று நீருக்காக பல கிலோமீட்டர் சென்று குடத்தில் நீர் எடுத்துவரும் அவலநிலை நேர்ந்திருக்ககூடுமா? மக்கள் இதனை உணரவேண்டும்.

கேள்வி: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்களான லாரி தொழில், முட்டை ஏற்றமதிக்கு என்ன செய்யவுள்ளீர்கள்?

  • பதில்: நாமக்கல் மாவட்டத்தில் ஏழ்மையில் உள்ள யாருமே லாரி, கோழிப்பண்ணை வைத்திருக்கவில்லை. இங்கு பெரும் முதலாளிகளே இத்தொழிலை மேற்கொண்டுவருகின்றன. இதற்காக திட்டம் ஏதுமில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத பாமர மக்களுக்கே செயல்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளது.

கேள்வி: நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருந்தது?

  • பதில்: நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் தொகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த தேர்தலில் இம்மாவட்டம் முட்டை மண்டலமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனை செய்தாரா? மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தனித் திட்டம் நிறைவேற்றவேண்டும்.

கேள்வி: தாங்கள் வெற்றிபெற்றால் கிடைக்கும் நிதியினை வைத்து தொகுதிக்கு எவ்வாறாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?

  • பதில்: நான் வெற்றிபெற்றால் கிடைக்கும் சம்பள பணத்தை தொகுதி மக்களுக்கே அர்ப்பணிக்கிறேன் என சொல்பவன் நான் இல்லை. மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் எனது சம்பளம் இரண்டுமே எனக்கு வேண்டாம். என்னிடம் மக்கள் சக்தி உள்ளது. நாங்கள் வெற்றிபெற்றால் தானாகவே அவர்கள் தேவை எளிதில் பூர்த்தியடைந்துவிடும். விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாசு முன்னேற நிதி ஒரு பொருட்டே இல்லை.

கேள்வி: நாமக்கல் மாவட்ட அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க தொகுதி பக்கமே வருவது இல்லை. எம்ஜிஆர் பாணியை பின்பற்றுகிறாரா?

  • பதில்: நாமக்கல் மாவட்ட அதிமுக வேட்பாளர் தொகுதிக்கு வருவதில்லை என்றால் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைத்துக்கொண்டுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் மின்சாரம் துண்டிக்கப்படும் அப்போது வீடுவீடாக சென்று பணம் கொடுப்பதாக திட்டம் தீட்டியுள்ளனர். அது நடக்காது. அவ்வாறு செல்லும்போது அவர்களை தொகுதியை விட்டு வெளியே விடமாட்டோம்.

கேள்வி: தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாலும் வாங்குவதில் என்ன தவறுள்ளது?

  • பதில்: தேர்தலில் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கிவிடலாம் என இரு திராவிட கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. வாக்குக்காக பணம் கொடுப்பது கற்பை பறிப்பது போன்றதாகும். படித்த இளைஞர்கள் பணம் வாங்கிக்கொண்டு தங்களது விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். இருப்பினும் கிராமப்புறத்தில் கல்வியறிவு இல்லாதவர்கள் அதனை செய்யமாட்டார்கள். அவர்களின் ஏழ்மையின் காரணமாக பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்கின்றனர். ஒருமுறை பணம் வாங்காமல் திருப்பியனுப்புங்கள் அடுத்த இரண்டு நாட்களில் உங்கள் தேவையை உடனே பூர்த்திசெய்வார்கள்.

கேள்வி: திருமணிமுத்தாறு திட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு அவசியமா?

  • பதில்: திருமணிமுத்தாறு திட்டம் என்று கூறுவதே தவறு. திட்டம் என்பதினால் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆட்சியாளர்கள் திட்டம் எனக்கூறி எவ்வாறு ஊழல் செய்யலாம் என கணித்து வருகின்றனர். அவர்களின் பைகளை நிரப்பவே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மக்களைதான் பாதிக்கும், ஆட்சியாளர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை. சத்துணவு திட்டத்தில் ஊழல், முட்டை டெண்டர் விடுவதில் என அனைத்திலுமே ஊழல். இவர்கள் எவ்வாறு ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்தப்போகிறார்கள்?

ABOUT THE AUTHOR

...view details