தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலிந்த நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை ! - நாடக கலைஞர்கள் சங்கம்

நாமக்கல் : நலிந்த நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை தொடர்ந்து வழங்க வேண்டும் என நாமக்கல் நாடக கலைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nadigar sangam meeting

By

Published : Nov 8, 2019, 8:46 AM IST

நாமக்கல் நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் ஆட்டோ ராஜா, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதா நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் நாடக சங்கத்தை சேர்ந்த 51 பேரை சங்கத்திலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி விடுவித்தால், நடந்தமுடிந்த தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார்.

நாமக்கல் நாடக சங்கத்தின்தலைவர் ஆட்டோ ராஜா செய்தியாளர் சந்திப்பு

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தற்போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கீதாவிடம் இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நலிந்த நாடக கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது அதனை சிறப்பு அதிகாரி தலையிட்டு மீண்டும் வழங்க ஆவண செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details