தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் எம்பிக்கு கரோனா உறுதி - நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்

நாமக்கல் தொகுதி எம்.பி. சின்ராஜுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Namakkal mp chinraj tested positive in Corona
Namakkal mp chinraj tested positive in Corona

By

Published : Nov 22, 2020, 10:20 AM IST

நாமக்கல்:திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.பி. சின்ராஜ். இவர் நேற்று காலை கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த பாஜக எம்.பி., உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details