தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவர் - நாமக்கல் மனைவி கொலை

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை மண்வெட்டியால் அடித்து கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

namakkal wife killed

By

Published : Nov 4, 2019, 11:29 AM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த நடுகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் இருவரும் ஒரே வீட்டில் தனித் தனி அரைகளில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இரவு மோகன்ராஜ் தனது மனைவி கெளசல்யாவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், வீட்டிலிருந்த மண்வெட்டியை எடுத்து கௌசல்யாவை தலையில் பலமாக தாக்கியயுள்ளார். இதில் படுகாயமடைந்த கௌசல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்

இதனையடுத்து மனைவியை கொலை செய்த மோகன்ராஜ் உடனடியாக சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் கௌசல்யாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுகாக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கொலைக்கான காரணங்கள் குறித்து மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுயத்தியுள்ளது.

இதையும் வாசிங்க:பிரியங்கா காந்தியின் செல்ஃபோன் மத்திய அரசு ஹேக் செய்துள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

.

ABOUT THE AUTHOR

...view details