தமிழ்நாடு

tamil nadu

வாக்குச்சீட்டில் தெளிவாக அச்சடிக்கப்படாத கை சின்னம் - வேட்பாளார் ஆட்சேபனை

நாமக்கல்: வாக்குச்சீட்டில் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னம் சரியாக அச்சடிக்கப்படாததாகக் கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகநாதன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 27, 2019, 1:33 PM IST

Published : Dec 27, 2019, 1:33 PM IST

ETV Bharat / state

வாக்குச்சீட்டில் தெளிவாக அச்சடிக்கப்படாத கை சின்னம் - வேட்பாளார் ஆட்சேபனை

Namakkal localbody election
Namakkal localbody election

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கோப்பனம்பாளைம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக உரம்பூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு திமுகவினர் மெத்தை விரிப்பு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொடுத்து வாக்கு கேட்டுக்கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதனை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதாத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு வந்த தேர்தல் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கூட்டத்தைக் கலைத்தனர்.

திமுகவினர் பணம் கொடுத்ததாக அதிமுகவினர் புகார்

அதேபோல திருச்செங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஏ. கைலாசம்பாளையம் வாக்கு மையத்தில் வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டில் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னம் சரியாக அச்சடிக்கப்படாததாகக் கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகநாதன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜெகநாதன்

அதன் காரணமாக 90, 91 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சின்னம் தெளிவாக தெரியும் வண்ணம் மின்விளக்குகள் பொருத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல்: மதுரை ஒத்தக்கடையில் சலசலப்பு

ABOUT THE AUTHOR

...view details