நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கங்கா டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் ஆடை தயாரிப்பிற்காக சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நூல், ஜவுளிப்பொருட்களை கடனாக பள்ளிப்பாளையம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட நாள்களுக்குள் அதற்கான தொகையினை திருப்பி செலுத்தாமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்திவந்தது. இதனால் பொருள்களை கொடுத்தவர்கள் கங்கா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் குமார், பழனிசாமியிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.