நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொல்லிமலை பகுதி மக்களின் அவசர தேவைக்காக இரண்டுஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
108 ஆம்புலன்ஸ் வாடகை வாகனமாக இயக்கம்... வீடியோ ஆதாரத்தால் குழப்பம்! - kollimalai ambulance issue
நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் வீட்டு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை, கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனையில் இயக்கப்படும் TN 20 G 2625 என்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில், சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள லேத் பட்டறையிலிருந்து இரும்பு பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது. இந்த காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டபோது, "இது தவறான செயல், இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்