"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது..." "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு", "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒத்துக்கொள்" என்பன போன்ற பல்வேறு வீரியமிக்க வரிகளின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர் தேசியக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
இன்று (அக்.19) அவரது 132ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெருவில் அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.