"ஜல் சக்தி அபியான்" விழிப்புணர்வு பேரணி ! - நாமக்கல்
நாமக்கல்: ’ஜல் சக்தி அபியான்’ சார்பில் நடைபெற்ற நீர் மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்
!["ஜல் சக்தி அபியான்" விழிப்புணர்வு பேரணி !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3801197-thumbnail-3x2-nkkl.jpg)
விழிப்புணர்வு பேரணி
நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஜல் சக்தி அபியான்" சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணி
இந்தப் பேரணியானது மோகனூர் சாலை, பிரதான சாலை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெற்றது. இப்பேரணியில் மகளிர் திட்ட அலுவலர் டாக்டர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்