தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியின் நிறைவு நாளான இன்று நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது.
மாநில கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல் - சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல் மாணவிகள் கபடி அணி
வேலூர்: ஜோலார்பேட்டையில் நடைபெற்ற இளம் மாணவிகளுக்கான மாநில கபடி போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அணி முதலிடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது.
kabaddi
இப்போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி ஈரோடு அணியை 34-21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து முதலிடம் பிடித்த நாமக்கல் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய், தங்க பதக்கமும் இரண்டாவது இடம் பிடித்த ஈரோடு அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசு கோவை, தருமபுரி ஆகிய மாவட்ட அணிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.