தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கத் தடை! - Statues of Ganesha statues mixed with chemicals prohibited

நாமக்கல்: "ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க தடை

By

Published : Sep 1, 2019, 4:50 PM IST

நாடு முழுவதும் நாளைவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 664 பேர் விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் அவர்களில் 650 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
மேலும் அவர் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் காவிரி ஆற்றில் சிலை கரைக்கும் போது, குறிப்பாக அதிகளவு சிலை கரைக்கும் இடங்களில் கிரேன் இயந்திரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details