நாமக்கல் மாவட்டம், பொய்யேரிக்கரை சாலை அருகே மதுரவீரன் காலனியை சேர்ந்தவர் விஜயா. இவர் தனது மாடி வீட்டை 1980ஆம் ஆண்டு அடகுவைத்து நாமக்கல் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சம் ரொக்கமாக பணம் பெற்றிருந்தார்.
நாமக்கலில் ரூ.7லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி? - வங்கி ஊழியர்கள்
நாமக்கல்: பொய்யேரிக்கரை சாலை அருகே கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய சென்ற வங்கி ஊழியர்கள், வீட்டில் ஆள் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பியுள்ளனர்.
கடனை அவரால் திருப்பிக் கட்ட முடியாததால், பணத்தை திரும்பப் பெற வங்கி சார்பில் 2011ஆம் ஆண்டு வீடு ஏலத்தில் விடப்பட்டது. அந்த வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவர் ஏலம் எடுத்திருந்தார்.
இதனையடுத்து ஏலத்தில் எடுத்த ஆண்டிலிருந்து இதுவரை வீட்டின் உரிமையாளர் விஜயா வீட்டை காலி செய்யாததால் இன்று வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்களுடன் வீட்டை ஜப்தி செய்ய காவல்துறையினருடன் வந்திருந்தனர். அப்போது விஜயாவின் மகள் மட்டும் வீட்டில் இருந்ததால், ஜப்தி நோட்டீஸை வீட்டின் சுவரில் ஒட்டிவிட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டை காலி செய்யாவிட்டால் ஜப்தி செய்யப்படும் என்று அவர் மகளிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.