தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை...! - நாமக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் வாழைப்பழம், நீரா பானம், இளநீர் சேர்க்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Namakkal Farmers Grievance Meeting Farmers Grievance Meeting நாமக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Farmers Grievance Meeting

By

Published : Feb 1, 2020, 1:58 PM IST

Updated : Feb 1, 2020, 2:45 PM IST

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மேகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அப்போது மோகனூர் விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது, "பரமத்தி வேலூர், மோகனூர் பகுதியில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

வாழையை பயிரிட்டு பராமரித்து விற்பனை செய்தால் அதற்குரிய நியாயமான விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தினம்தோறும் வாழைப்பழம், நீரா பானம், இளநீர் வழங்கவேண்டும். இதன்மூலம் பல்லாயிரம் ஏக்கர் வாழை, தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலன் பெறுவார்கள்" என தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தொடர்ந்து விவசாயி துரைசாமி கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய விலை கிடைக்கவில்லை. வருங்காலங்களில் விவசாயிகள் நேரடியாக மரவள்ளிக்கிழங்கை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்ய பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்".

இதையும் படிங்க:

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விடைபெற்றது பிரிட்டன்

Last Updated : Feb 1, 2020, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details