நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள சுள்ளிபாளையத்தில் உள்ள தனியார் கிரானைட் குவாரியில் பாறைகளைத் தகர்ப்பதற்காக சட்டவிரோதமாக வெடி மருந்து பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அருளரசுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில், பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலான காவலர்கள், தனியார் கிரானைட் குவாரிக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், அங்கு பாறைகளைத் தகர்ப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிமருந்து பொருள்கள் இருந்தது தெரியவந்தது.