தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் எண்ணிக்கை நேற்று (மே.02) நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல் குமாரபாளையம், பரமத்தி-வேலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
ராசிபுரம் தனி தொகுதி:
திமுக வேட்பாளர் மருத்துவர் மா. மதிவேந்தன்- 90727 (வெற்றி)
அதிமுக வேட்பாளர் மருத்துவர் வெ. சரோஜா – 88775.
வாக்குகள் வித்தியாசம்- 1952
சேந்தமங்கலம் தொகுதி:
திமுக வேட்பாளர் கே. பொன்னுசாமி- 90681 (வெற்றி)
அதிமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் – 80188
அமமுக வேட்பாளர் பி.சந்திரன் – 831
நாம் தமிழ் கட்சியின் வேட்பாளர் டி.ரோகிணி - 1166
வாக்கு வித்தியாசம்- 10495
நாமக்கல் தொகுதி :
திமுக வேட்பாளர் பெ. ராமலிங்கம் - 106494 (வெற்றி)
அதிமுக வேட்பாளர் கே.பி..பி. பாஸ்கர் – 78633
தேமுதிக வேட்பாளர் கே. செல்வி- 972
மொத்தம்-257771
பதிவான வாக்குகள் – 201887
வாக்கு வித்தியாசம் : 27861