நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள கபிலர்மலை ஒன்றியதிற்குட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதற்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில், 2வது வார்டு உறுப்பினராக திமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவரது மனைவி ராஜாமணியும், 6 வது வார்டு உறுப்பினராக அதிமுக பிரமுகரான செந்தில்குமார் என்பவரது மனைவி சத்யா என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் திமுக பிரமுகர் ஆறுமுகமும், அதிமுக பிரமுகர் செந்தில்குமார் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், இருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டு துணைத்தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ஆறுமுகத்தின் மனைவி ராஜாமணிக்கும் செந்தில்குமாரின் மனைவி சத்யாவிற்குமிடையே போட்டி நிலவியது.
இதன்காரணமாக, ஆறுமுகம் தனது மனைவிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை விட்டுத்தருமாறு செந்தில்குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு செந்தில்குமார் சம்மதிக்கவில்லை எனவும் இதனால், ஆத்திரமடைந்த ஆறுமுகம் 20 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய நண்பரான செந்தில்குமாரை கொலை செய்யும் நோக்கில் டிசம்பர் 29ஆம் தேதி இரவு மது அருந்த அழைத்துள்ளார். செந்தில்குமாரும் அவரது மற்றொரு நண்பரான தியாகராஜனும் மது அருந்தச் சென்றுள்ளனர்.
அப்போது, ஆறுமுகம் தண்ணீர் குழாய்களில் படிந்திருக்கும் உப்புகளை அகற்ற பயன்படும் அமிலத்தை ஆறுமுகமும் அவரது நண்பரான சரவணன் ஆகியோர் இணைந்து செந்தில்குமார், தியாகராஜன் அருந்தும் மதுவில் கலந்ததாக கூறப்படுகிறது. அமிலம் கலந்த மதுவை அருந்திய இருவரும் தீவிர வயிற்றுவலி காரணமாக பரமத்திவேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.