நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.