நாமக்கலில் முட்டை விலை உயர்வு! - நாமக்கல் மாவட்டச் செய்திகள்
நாமக்கல் : முட்டை விலை இன்று ஒரேநாளில் 15 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டை மூன்று ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (ஆக. 29) நடைபெற்றது. இதில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை மூன்று ரூபாய் 75 காசுகளில் இருந்து 15 காசுகள் உயர்த்தி மூன்று ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 27ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை மூன்று ரூபாய் 65 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தப்பட்டு மூன்று ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, மீண்டும் 15 காசுகள் விலை உயர்த்தப்பட்டு மூன்று ரூபாய் 90 காசுகளுக்கு முட்டைகளை விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.