நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினசரியாக ரூ. 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யக்கூடிய முட்டைகளுக்கான விலையை தினசரி நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துவருகிறது.
அதன்படி ரூ.5.05 இருந்த ஒரு முட்டையின் விலையை இன்று (அக்.3) திடீரென 20 காசுகள் அதிகரித்து ரூ. 5.25 காசுகளுக்கு விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்ற மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவரான சிங்குராஜிடம் கேட்டபோது, "கரோனா நோய் தொற்றால் முழு ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில் நாமக்கல் மண்டலம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழி குஞ்சுகளின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தோம்.