தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை கூறிய மாவட்ட ஆட்சியர்!

நாமக்கல்: முகக்கவசம் அணியாமல் சென்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 20, 2020, 3:49 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், தினசரி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாமக்கல் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், பூங்கா சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் முகக்கவசம் அணிந்துள்ளனரா, பேருந்தில் பயணம் செய்யும்போது மக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றுகின்றனரா என ஆய்வு செய்தனர்.

மேலும் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி முகக்கவசங்களை இலவசமாக வழங்கினர். தொடர்ந்து பூங்கா சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை வரிசையாக நிற்கவைத்து கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள், அதனைத்தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துக்கூறி அபராதங்களும் விதித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details