தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு - நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல்: தேர்தல் விதிமீறல் தொடர்பாக இரண்டு வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

1

By

Published : Mar 30, 2019, 7:21 PM IST

தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசியா மரியம் கூறியதாவது, நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் மேலிட பொது பார்வையாளராக வாணி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் பொதுமக்கள் நேரிடையாக காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை புகார் தெரிவிக்கலாம். மேலும் அவரது அலைபேசி எண்களிலும் 9491975131 புகார்களை தெரிவிக்கலாம்.

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ராணுவத்தினர் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

இதுவரை நாமக்கலில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் ரூபாய் 55,30,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்கம் 37.935 கிலோ, வெள்ளி 8.82 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்து இதுவரை 18 புகார்கள் வந்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கு 19 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரு வேட்பாளர்களின் மீது தேர்தல் விதிமீறல் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details