தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2019, 6:37 AM IST

ETV Bharat / state

இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வு

நாமக்கல்: இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வுசெய்யப்பட்டு மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக விருது தரப்பட்டுள்ளது.

"இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்த மாவட்டமாக நாமக்கல் தேர்வு"


நாமக்கல் மாவட்டத்தில் 2014 - 2015ஆம் ஆண்டின் கணக்கு எடுப்பின்படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 867 ஆக இருந்தது. இந்நிலையில் 2017-2018ஆம் ஆண்டில் "பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் உதவியோடு, பெண் குழந்தைகள் கருவிலேயே களைக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால், 2018 - 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 935 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் மாவட்டமாக, நாமக்கல் தேர்வு செய்யப்பட்டது.

இதை பாராட்டும் விதமாக மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திற்கு விருது வழங்கினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details