கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தத்தின் இருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் ரத்தம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அனுமதியுடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.