கோழி எரு, பயன்படுத்த இயலாத அழுகிய பழங்கள், கால்நடைகளின் சாணம் ஆகியவற்றிலிருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்து, அதனை வாகன எரிபொருளான மீத்தேனாக உற்பத்தி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் பகுதியில் 25 கோடி ரூபாய் செலவில் 2.4 மெகாவாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக இயற்கை எரிவாயுவில் இருந்து, Compressed Bio Gas (CBG) தயாரிக்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவை புதுச்சத்திரம், நாமக்கல், ராசிபுரம், சேலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய இந்திய ஆயில் கார்ப்ரேசன் திட்டமிட்டுள்ளது.