தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஞ்சநேயருக்கு தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல்
நாமக்கல்

By

Published : Jan 1, 2021, 12:59 PM IST

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் குடவரை கோயில்களில் குடிகொண்டுள்ள நரசிம்மர் - அரங்கநாதர் சுவாமிகளை வணங்கியபடி, நகரின் மையப்பகுதியில் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு எண்ணெய், சிகைக்காய், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வடைமாலை சார்த்தப்பட்டது. தொடர்ந்து, ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தயிர் அபிஷேகமும் நடைபெற்றது.


இதனையடுத்து, முக்கிய நிகழ்வாக, 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
முன்னதாக, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகிய வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details