தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஞ்சநேயர் கோயிலில் ஆயுதபூஜை கொண்டாட்டம்! - நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

By

Published : Oct 7, 2019, 6:22 PM IST

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், கோபுரங்கள் இல்லாமல் திறந்த வெளியில் ஒற்றை கல்லால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு தினசரி பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுவது வழக்கம்.

ஆயுத பூஜையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அலங்காரம்

இந்நிலையில், இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைக் காண நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details