மருத்துவமனை உணவக மேற்கூரை இடிந்து விபத்து! இருவர் பலி - நாமக்கல்லில் விபத்து
2019-04-22 18:17:15
நாமக்கல்: தங்கம் மருத்துவமனை உணவகம் முன் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்ததில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த மருத்துவரும், வாகன ஓட்டுநரும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் தங்கம் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை, சற்றும் எதிர்பாரா விதமாக மருத்துவமனை உணவகத்தின் முன்னிருந்த மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மருத்துவர் கலா, வாகன ஓட்டுநர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த நான்கு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.