தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 வயதில் ஊராட்சி மன்ற தலைரான பெண்..!

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே 21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

21 years old girl won The Panchayat President
21 years old girl won The Panchayat President

By

Published : Jan 3, 2020, 6:32 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேளூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுப்பையம்பாளையத்தைச் சேர்ந்த பா.ரோகிணி (21) என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிப்பெற்றுள்ளார். இவர் பட்டம் பெற்று விவசாயம் செய்துவருகிறார். இவருக்கு சதீஸ்ராஜன் என்பவருடன் திருமணம் முடிந்து ஒன்றரை வயதில் சம்யுதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில்,தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சேளூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதி நாளில்தான் வேட்மனு தாக்கல் செய்தேன்.

தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே இனிவரும் காலங்களில் சேளூர் ஊராட்சி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்’ என்றார்.

ஊராட்சி மன்ற தலைவியான பெண்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 ஊராட்சி மன்ற தலைவர்களில் 21 வயதில் தலைவரானது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வாகை சூடிய இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details