தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தள்ளாத வயதில் ஊராட்சித் தலைவரான நல்லம்மாள் - பொதுமக்கள் வாழ்த்து! - ஊராட்சிக்கு தலைவர்

நாமக்கல்: எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றி 82 வயது மூதாட்டி நல்லம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

old_lady_president
old_lady_president

By

Published : Jan 4, 2020, 9:01 PM IST

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சியில் 531 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த ஊராட்சிக்குத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தலைவராக 82 வயது மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாது புஞ்சைபுதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 6 வார்டுகளின் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தள்ளாத வயதிலும் யார் உதவியும் இல்லாமல் நடக்கும் நல்லம்மாள், நாளை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வருகிறார்.

82 வயதில் ஊராட்சித் தலைவரான நல்லம்மாள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முதியோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நல்லம்மாளை பொதுமக்களே ஒருமனதாகத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏர் இந்தியா விமான ஊழல் வழக்கு: ப.சிதம்பரத்திடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details