கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் பேருந்து கண்ணாடி உடைத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் ஆஜராகுவதை அறிந்த தமிழ் புலிகள் அமைப்பினர் பலர் நாமக்கல் நீதிமன்றத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நாகை திருவள்ளுவனின் வழக்கறிஞர் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின்போது நாகை திருவள்ளுவன் சிறையில் இருந்ததாகவும், வேறு யாரேனும் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டால் திருவள்ளுவன் பொறுப்பேற்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜெயந்தி இந்த வழக்கைப் பதியாமல் சாட்சிகளை மேற்கோள்காட்டி மற்ற வழக்குகளுக்கு ஆஜர்படுத்தக் கூறினார்.