தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 22, 2019, 9:34 PM IST

ETV Bharat / state

‘சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்’ - நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல்: மாணவர்கள் சம்பாதிக்கும் போது சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Namakkal

நாமக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டார். பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், "பள்ளி காலத்திலிருந்தே மாணவர்கள் சேமிப்பில் ஈடுபட வேண்டும்‌.

பணத்தை சிறுக சிறுக சேமித்தால் தான் சம்பாதிப்பதின் அருமை தெரியவரும். மாணவர்கள் நன்கு படித்து உயரிய பதவிகளுக்குச் செல்லும் காலங்களில் சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்.

உலக சிக்கன நாள் விழா

ஒருவர் பள்ளியிலிருந்தே பணத்தைச் சேமிக்க பழகிவிட்டால், வளர்ந்த பின் அப்பழக்கம் அவர்களின் வாழ்வை எளிதாக்கும். சேமிப்பின் அவசியம் குறித்து ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து ஆட்சியர் பள்ளிகளில் நடைப்பெற்ற சிறு சேமிப்பு குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வாள் வீச்சு போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details