தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைகளைக் கொட்டி மயானத்தை ஆக்கிரமிக்கும் பேரூராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு - இறந்தவர்களின் உடலை சாலையோரம் புதைக்கும் அவலம்

மோகனூர் பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளைக் கொட்டி மயானத்தை ஆக்கிரமித்துள்ளதால், இறந்தவர்களின் உடல்களை சாலையோரங்களில் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

mohanur_cemetery
mohanur_cemetery

By

Published : Nov 8, 2020, 3:00 PM IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், மோகனூர் பேரூராட்சி பகுதியில், செங்கத்துறை என்ற இடத்தில் இருந்த மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணிக்காக மயானத்திற்கு சொந்தமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. அதேபோல், மோகனூர் பேரூராட்சியில் அன்றாடம் சேரும் குப்பைகளும் இந்த மயானத்தில் தான் கொட்டப்படுகிறது.

இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, இறந்தவர்களின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இறந்தவர்களின் உடல்கள் சாலையோரத்தில், தகனம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மோகனூர் பேரூராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய தகன மேடை அமைத்துக் கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details