தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு! - காவல்துறையினர் விசாரணை

நாமக்கல்: முத்துகாபட்டி அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விழுந்த விபத்தில் நாமக்கல் நகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Municipal employee killed in passenger auto crash
Municipal employee killed in passenger auto crash

By

Published : Dec 2, 2020, 9:44 PM IST

நாமக்கல் நகராட்சியில் ஒப்பந்த‌ அடிப்படையில் துப்பரவு தொழிலாளியாக பணியற்றி வருபவர் சிவியம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி(26). இவர் இன்று மாலை சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி பெரியசாமி கோவிலுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பயணிகள் ஆட்டோவில் சென்றுள்ளார்.

இவர்கள் சென்ற ஆட்டோ பெரியசாமி கோவிலுக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:166 படகுகள் கரை திரும்பியுள்ளன - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details