உலக அன்னையர் தினம் கடந்த ஞாயிறு அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இவ்வுலகில் நம்மை ஜீவித்து, சுவாசம் கொடுத்தவர் தாய் எனும் அற்புத பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தின் மேன்மையை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நியூ காந்தி மக்கள் இயக்கம் சார்பில் அன்னையர் தின கொண்டாட்டம்!
நாமக்கல்: நியூ காந்தி மக்கள் இயக்கம் சார்பில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
நியூகாந்திமக்கள் இயக்கம் சார்பில் அன்னையர் தினம் கொண்டாட்டம்
அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் நியூ காந்தி மக்கள் இயக்கம் சார்பில் அன்னையர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் அன்னையர்களை போற்றும் விதமாகவும், அவர்களின் பெருமைகளை எடுத்துரைத்து, அன்னையரை போற்றுவதின் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக அன்னையர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களின் காலில் விழுந்து அசீர்வாதம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என அனைத்து மதத்தைச் சார்ந்த முதியவர்களும் கலந்து கொண்டனர்.