தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை விற்பனை வழக்கில், மேலும் 2 பெண்கள் கைது! - குழந்தை விற்பனை வழக்கில்

நாமக்கல்: தமிழகத்தையே உலுக்கிய நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் நான்காம் நாளாக இன்றும் மூன்று இடைத்தரகர்களிடம் தீவிர விசாரணையை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மேற்கொண்டனர்.

குழந்தை விற்பனை வழக்கில், மேலும் 2 பெண்கள் கைது!

By

Published : Apr 28, 2019, 11:04 PM IST

Updated : Apr 28, 2019, 11:44 PM IST

ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் குழந்தை விற்பனை குறித்துப் பேசிய ஆடியோ தொலைக்காட்சிகளிலும், சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அமுதா, அவருடைய கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

அமுதா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொல்லிமலை ஆரம்பச் சுகாதார நிலைய அவசர ஊர்தி ஓட்டுநர் முருகேசனிடம் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைக்கவே, அதைக் கொண்டு பர்வீனா பானு, ஹசீனா, ஜெயராஜ், பாண்டியன், கோமதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நான்காம் நாளாக இன்றும் இடைத்தரகர்களான செல்வி, லீலா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உட்படுத்தப்பட்டனர். இருவரும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்பட்டுத்தப்பட்டனர். இருவரையும் மே 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2 பெண்கள் கைது

இவ்வழக்கில் இதுவரை 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Apr 28, 2019, 11:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details