தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சௌகிதார்’ என்று சொல்வதற்கு தகுதி வேண்டும் - மோடியை விளாசிய நாஞ்சில் சம்பத்! - நாமக்கல்

நாமக்கல்: காவலாளி என்ற சொல்லுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் தேசத்தின் பிரதமராக இருக்கிறார் என மோடியை திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

By

Published : Mar 31, 2019, 8:49 AM IST

நாமக்கலில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து நாஞ்சில் சம்பத் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

மோடியை விளாசிய நாஞ்சில் சம்பத்

இக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மோடி சௌகிதார் என்று செல்வதற்கு கூட தகுதி வேண்டும். காவலாளி என்ற சொல்லுக்கு பொருத்தம் இல்லாதவர் இந்தியாவிற்கு பிரதமராக உள்ளார் என சாடினார்.

மேலும், அதிமுக கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், வருகின்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும், துரோகியின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என மத்திய, மாநில அரசுகளை மிகக்கடுமையாக விமர்சித்தார்.





ABOUT THE AUTHOR

...view details