தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாற்காலியைக் காக்க விவசாயிகளை அடமானம் வைத்த பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு - dmk leader MK stalin speech

நாமக்கல்: கொள்முதல் செய்யப்படாமலும், மழையில் நனைந்தும் நெல் மணிகள் வீணாவது முதலமைச்சர் பழனிசாமிக்கு தெரியுமா? ' விவசாயி' என்று சொல்லிக் கொண்டால் போதாது, விவசாயிகளுக்காகக் கவலைப்பட வேண்டும்; திட்டம் போட வேண்டும். மக்களிடம் தினமும் ஒரு வேடம் போட்டு நடிக்கக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

dmk leader stalin
dmk leader stalin

By

Published : Oct 25, 2020, 2:32 AM IST

நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் திமுகவின் முப்பெரும் விழா காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஸ்டாலின் ஆற்றிய உரை, "மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அது மட்டுமல்ல, இந்த சட்டங்களால் வேளாண்மைத் துறையே மொத்தமாக சிதைந்து போகும்.

தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக ஆக்குகிறது. உணவுப் பாதுகாப்பும், நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகமும், கேள்விக் குறியாகும். உழவர் சந்தைகளை இனி அனுமதிக்க மாட்டார்கள்.

கரும்பு ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளைப் போல, அனைத்து விவசாயிகளையும் தவிப்புக்கு ஆளாக்க நினைக்கிறார்கள். எனவே தான் இந்தச் சட்டங்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எதிர்த்தது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி, இருக்கும் வருமானத்தை மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தையும் பறிக்கத் திட்டம் போடுகிறார். இதனை எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்க வேண்டும். துணிச்சல் இருக்கிறதா? இல்லை. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ஆதரித்து, அதிமுக நாற்காலியைக் காக்க விவசாயிகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.

காணொலி மூலம் நடந்த முப்பெரும் விழா

இந்த பச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் பழனிசாமி. நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயச் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டாமா? அவர் விவசாயி அல்ல; விவசாயியைப் போல வேஷம் போடுபவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது.

இந்தப் போலி விவசாயி ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் டன் கணக்கில் நெல்மணிகள் வீணாகி வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழக அரசின் முறையான திட்டமிடல் இல்லாததாலும் முன்னேற்பாடுகள் செய்யப்படாததாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் வரை நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதைப் பார்த்து இந்த போலி விவசாயிக்கு கண்ணீர் வந்ததா? கவலைப்பட்டாரா?

தொண்டர்களுடன் திமுக தலைவர் பேச்சு

விவசாயி, விவசாயி’ என்று சொல்லிக் கொண்டால் போதாது. விவசாயியைப் போல நடக்கவேண்டும், விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும். விவசாயிகளுக்காக திட்டம் போட வேண்டும். அப்போதுதான் விவசாயி என்று சொல்லிக் கொள்ள முடியும். அது இல்லாமல் மக்களிடம் தினமும் ஒரு வேடம் போட்டு நடிக்கக் கூடாது" என்று பேசினார்.

இதையும் படிங்க:2021 பொதுத்தேர்தல்: தளபதியை தலைவராக்க அரசியல் களத்தில் சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றனவா?

ABOUT THE AUTHOR

...view details