தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேய் ஓட்டுவதாக கூறி சிறுமிகளிடம் சில்மிஷம்: கோயில் பூசாரி போக்சோவில் கைது - கோயில் பூசாரி போக்சோவில் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே பேய் ஓட்டுவதாக கூறி இரு சிறுமிகளை ஒருவாரமாக பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Child abuse
Child abuse

By

Published : Nov 18, 2020, 4:36 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு 15 வயது, 13 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பெற்றோரிடம் சரி வர பேசாததால் பேய் பிடித்ததாக எண்ணி சிறுமிகளை ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் பகுதியில் உள்ள கோயில் பூசாரி சேகர் (55) என்பவரிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது பூசாரி சேகர் சிறுமிகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் ஒரு வாரம் சிறுமிகளை வைத்து பூஜை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பூசாரி அச்சிறுமிகளை ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கோயில் பூசாரி சேகர்

தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து சிறுமிகள் தனது தயாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் பூசாரி சேகர், சிறுமிகளை தொடர்ந்து ஒருவாரமாக பாலியல் வன்கொடுமை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பூசாரி சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேபோல் கடந்த மாதம் ராசிபுரம் அருகே இரு சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்த 70 வயது முதியவர் உள்பட 15 பேரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details