நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை விபரங்கள் ஊரடங்கு தளர்விற்குப் பிறகு உள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, "நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்தால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 210 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போது மின் தேவை குறைவாக உள்ளதாலும், போதிய மின்சாரம் உள்ளதாலும், எந்த பிரச்சனையும் இல்லை.