தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சத்தமில்லாமல் கொள்ளை அடிப்பவர் அமைச்சர் தங்கமணி’ - மு.க.ஸ்டாலின்

நாமக்கல்: மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி கொள்ளை அடித்துவிட்டு தமிழகத்தை மின் மிகை மாநிலம் என அமைச்சர் தங்கமணி பொய் கூறி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் குற்றஞ்சாட்டினார்.

stalin
stalin

By

Published : Mar 16, 2021, 10:18 PM IST

நாமக்கல் மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலையில் மு.க. ஸ்டாலின் இன்று மாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.மதிவேந்தன், சேந்தமங்கலம் திமுக வேட்பாளர் பொன்னுசாமி, நாமக்கல் திமுக வேட்பாளர் இராமலிங்கம், பரமத்தி-வேலூர் திமுக வேட்பாளர் மூர்த்தி, திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ”சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தங்கமணி சத்தமில்லாமல் கொள்ளை அடித்து வருபவர். காற்றாலை மின்சார ஊழல், மின்வாரிய உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல், நிலக்கரி ஊழல், கரோனா கால மாஸ்க் வாங்கியதில் ஊழல், பிளிச்சிங் பவுடர் ஊழல் என அனைத்திலும் இந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. எனவே, தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லாத எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலோடு அரசியலை விட்டே செல்ல வேண்டும்.

பல மாநிலங்களிலிருந்தும், தனியாரிடமிருந்தும் அதிக விலைக்கு வாங்கி தமிழகத்தை மின் மிகை மாநிலம் என அமைச்சர் தங்கமணி பொய் கூறி வருகிறார். தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கினால்தான் அதில் கமிஷன், லஞ்சம் கிடைக்கும் என்பதால் வெளியிலிருந்து வாங்குகின்றனர். திமுக அரசு அமைந்ததும், நாமக்கல்லில் முட்டை குளிர்பதன கிடங்கும், சேந்தமங்கலத்தில் விவசாய குளிர்பதன கிடங்கும் அமைக்கப்படும். லாரி தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: மதுரை விற்பனையாளர்களுக்கு திருவிழாவாகுமா இந்தத் தேர்தல்?

ABOUT THE AUTHOR

...view details