தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் விபத்து ஏற்படவில்லை” - அமைச்சர் தங்கமணி

அரசு மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணியில் கான்கீரிட் தூண் இடிந்த விழுந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டடம் எதுவும் இடிந்துவிழவில்லை என்று கூறினார்.

Minister Thangamani
Namakkal medial college building collapse

By

Published : Oct 30, 2020, 6:29 PM IST

நாமக்கல்:நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 60 சதவீத நிறைவடைந்துள்ள நிலையில் கான்கீரிட் தூண் இடிந்த விபத்துக்குள்ளானதை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.

கான்கீரிட் தூண் இடிபாடு

அப்போது கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு விபத்து எவ்வாறு ஏற்பட்டது, அதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ், பொது பணித்துறை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

சேதமடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தி, கட்டுமான பணிகளை விரைவாகவும் தரமான பொருள்கள் பயன்படுத்துமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணியின் போது விபத்து ஏதும் ஏற்படவில்லை, வெல்டிங் விட்டு போனதால் கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால் அலுவலர்களே கட்டடத்தை இடித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் இடிந்து விழுந்த கட்டடப் பகுதிகள்

நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அரசு கட்டுமான பணிகள் தரமின்றி கட்டப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குறித்து கேட்டப்போது, ”அரசு கட்டுமானப் பணிகளை அலுவலர்கள் தான் ஆய்வு செய்திட வேண்டும், நாமக்கல் எம்.பி அரசியல் விளம்பரத்திற்காக அரசு கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியின்போது விபத்து

ABOUT THE AUTHOR

...view details