தமிழ்நாடு

tamil nadu

பெண்குழந்தைகள் மீதான அத்துமீறல்களைக் குறைக்க பல துறைகளுடன் கைக்கோர்த்து நடவடிக்கை

By

Published : Sep 23, 2020, 3:23 AM IST

Updated : Sep 23, 2020, 7:51 AM IST

நாமக்கல் : கரோனா காலத்தில் பெண்கள், குழந்தைகளின் மீதான துன்புறுத்தல்களைக் குறைக்க அனைத்து துறைகளுடனும் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரோஜா  namakkal district news  welfare  minister saroja  minister thangamani  நாமக்கல் மாவட்டச் செய்திகள்  பெண்குழந்தைகள் மீதான வன்முறை  அமைச்சர் சரோஜா
அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 619 பயனாளிகளுக்கு ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் சரோஜா பேட்டி

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் இவ்வாண்டு மூன்றாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கரோனா காலத்தில் எட்டு லட்சத்து 65 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பெண் குழந்தைகளின் மீதான துன்புறுத்தல்களைக் குறைக்க அனைத்து துறைகளுடனும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:‘அரசுப் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Last Updated : Sep 23, 2020, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details