நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடம் ஆகியவை 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவருகின்றன.
60 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு இரண்டாம் தளம் கட்டும் பணி அக்.29 இரவு நடைபெற்றது. கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த தூண் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பணியிலிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.