நாமக்கல்:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்க ளில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களும் மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என, ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். அதன்படி பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டன.
இடமாற்றம் செய்யப்பட்ட இறைச்சிக் கடைகள்
மேலும் கரோனா தடுப்பு விதிமுறை மீறல் கண்காணிப்பு குழுவினர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது உத்தரவை மீறி, மாலை 5 மணிக்கு மேல் திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட், நேற்று (ஆக.9) காலை மூடப்பட்டது. பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு, நாமக்கல் கவிஞர் திடலில் கடைகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் நகரில் செயல்பட்டு வந்த இறைச்சி, மீன் கடைகள் அனைத்தும், இன்று (ஆக.10) முதல் முதலைப்பட்டி, காவேட்டிப்பட்டி, மோகனூர் ரோடு, பழைய ஆட்சியர் குடியிருப்பு அருகில் மாற்றப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:விநாயகர் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு